மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. உங்கள் எண்ணங்கள் நேர்மறையாக சிந்திக்க ஆரம்பிக்கும். குடும்பத்தில் ஒற்றுமைக்கு குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் நண்பர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மௌனம் அவசியம் தேவை. காரிய சித்தி உண்டாக விநாயகரை வழிபடுதல் சிறப்பு.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்த நன்மைகளை கொடுக்கக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றியை அடைவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்கள் மன அமைதியை கெடுக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொருளாதார ரீதியான ஏற்றம் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும். தொலை தூர இடங்களில் இருந்து சில நல்ல செய்திகளை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவி அன்பு குறையும் எனவே நிதானம் தேவை. உத்யோகத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத விஷயங்களில் எதிர்பாராத மாற்றங்களை சந்திப்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூல பலன் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் முன்னெடுக்கும் ஒவ்வொரு புதிய விஷயமும் சாதக பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை மேலும் அதிகரிக்கும் என்பதால் டென்ஷன் இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான பலன்களைக் கொடுக்கக் கூடிய அற்புத நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் போக்குவரத்து தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. புதிய நட்பு வட்டம் விரியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் அனுகூல பலன் கொடுக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் எச்சரிக்கை தேவை. முருக வழிபாடு நன்மை தரும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். உங்கள் பேச்சாற்றலில் இனிமை இருப்பதால் மற்றவர்களை எளிதாக கவர்ந்து விடுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நட்பு வட்டம் விரியும். போட்டி பொறாமைகளை களைந்து ஒற்றுமை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். தேவையான நேரத்தில் ஓய்வு எடுத்துக் கொள்வது ஆரோக்கியம் காக்க சிறந்த பலனாகும். வேலவனை வணங்குங்கள்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை விட அதிக லாபம் தரக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் பண வரவுக்கு குறைவிருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும் என்பதால் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. பொருளாதார முன்னேற்றம் இருக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் கவலைகளைப் போக்கி மனநிம்மதி பெற கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் தொகை கைக்கு வந்து சேரும். உத்யோகத்தில் இருப்பவர்கள் உடைய மதிப்பு அலுவலகத்தில் வெளிப்படும் அற்புத நாளாகும். திறமைக்கு உரிய பாராட்டுகளைப் பெறுவீர்கள். வெளியிடப் பயணங்களின் போது கவனம் தேவை.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் தரும் நாளாக இருக்கும். நினைத்ததை அடையக்கூடிய வைராக்கியம் மேலோங்கி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பங்குதாரர்கள் உடைய ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் நீங்கள் பணிபுரியும் இடங்களில் பேசும் பொழுது கவனம் தேவை. தேவையற்ற அனாவசிய வாக்குவாதங்களை தவிர்த்து வேலையில் கவனம் செலுத்தினால் நல்லது. ஈஸ்வரனை வழிபடுங்கள்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமான பலன்களைக் கொடுக்கக் கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய தொழில் துவங்கும் எண்ணம் மேலோங்கி காணப்படும். ஒரு சிலருக்கு அரசு வழி அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய உச்சத்தில் இருப்பவர்களுக்கு முயற்சி உறுதுணையாகும். கந்தனை வழிபடுங்கள்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமான பலன்களைக் கொடுக்கும் என்றாலும் எதிலும் விழிப்புணர்வு தேவை. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வீண் அலைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மறைமுக எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து காட்டுவீர்கள். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் படிப்படியாக குறையும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதமான பலன்களைக் கொடுக்கும் நல்ல நாளாக இருக்கும். தாய்வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதகப்பலன் உண்டாகும். வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் லாபம் பெருகும். வீண் விரயங்கள் ஏற்படாமலிருக்க ஆடம்பரத்தை குறைப்பது நல்லது.