மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை கத்தாளம்பிட்டி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை கேரள கஞ்சா பொதிகளை நேற்று அதிகாலை விசேட அதிரடிப் படையினர் மீட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று அதிகாலை இலுப்பைக்கடவை கத்தாளம்பிட்டி பகுதிக்குச் சென்று 4 மூடைகளில் பொதி செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட கஞ்சா பொதி 104 கிலோ 750 கிராம் எடை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இலுப்பைக்கடவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.