மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் இன்று அதிகாலை முற்றுகையிட்டனர்.
இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்ததுடன் 50 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பும்,3 இலச்சத்து 20 ஆயிரம் மில்லி லீற்றர் கோடாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக மாவட்ட விசேட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.
பொலிஸ் மாவட்ட விசேட குற்ற விசாரணைப்பிரிவு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்காவின் ஆலோசனைக்கமைய மாவட்ட விசேட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையிலான இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் கைதானவர்கள் ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.