குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை ஆஜராகுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணாயக்காரவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத் திணைக்களத்தின் கணினி தொழில்நுட்பப் பிரிவு மேற்கொள்கின்ற விசாரணைகாகவே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இந்த அழைப்பின் பின்னணியில் உள்ள காரணம் தெரிவிக்கவில்லை என்பதனால் , சட்ட ஆலோசனை பெறவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் எந்தவொரு சட்டபூர்வமான விசாரணையை நடத்த ஒத்துழைப்பினை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணாயக்கார குறிப்பிட்டுள்ளார்