வவுனியாவில் மதுபானசாலைக்கு முன் திரண்ட குடிமக்களினால் புதிய கொத்தணி உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் மதுபானசாலை திறப்பது தொடர்பாக இன்றையதினம் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன. இதனையடுத்து தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையிலும் கூட மதுபானசாலைகளிற்கு முன் அதிகளவான குடிமக்கள் கூடியிருந்தனர்.
எனினும் இதன் காரணமாக வவுனியா நகரம், தாண்டிக்குளம் புதுக்குளம் வீதி, மன்னார் வீதி முடங்கும் நிலை ஏற்பட்டது. குறிப்பாக மன்னார் வீதியில் அமைந்துள்ள ஒரு மதுபானசாலைக்கு முன்பு 500க்கும் அதிகமான குடிமக்கள் குழுமியிருந்தனர்.