வவுனியாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது.
வவுனியா சுகாதாரப்பிரினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து வவுனியா சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவின் 8 நிலையங்களில் காலை 9 மணி முதல் சினோபாம் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றது.
இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்குவதற்காக 81 ஆயிரம் தடுப்பூசிகள் வவுனியாவிற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு நிலையங்களிலும் 500 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் வைத்தியர் பிரசன்னா தலைமையில் தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 60 வயதிற்கு மேற்பட்ட 500 பேருக்கு இரண்டாவது டோஸ் சினோபாம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டது.