கிளிநொச்சி மாவட்டத்தில் கொவிட் தொற்றினால் 38 இறந்துள்ளதுடன். 4,885 தொற்றாளர்களில் 2,374 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நேற்று முன்தினம் (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் 4,885 பேர் இதுவரை தொற்றுக்குள்ளாகியுள்ளனர். 2,374 பேர் வீடுகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்றுக்கு உள்ளாகிய 3,691 குடும்பங்களுக்கு உலருணவு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று மாவட்டத்தில் இதுவரை கொவிட் தொற்றால் 38 பேர் இறந்துள்ளனர்.
அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு அமைய சதொச கூட்டுறவு சங்கங்கள் ஊடாக சீனி நியாய விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 39,500 கிலோ கிராம் சீனி எமது மாவட்டத்திற்கு கிடைக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்கள் ஊடாக விநியோகிக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.