பேலியகொடை அதிவேக வீதியில் புதிய களனி பாலத்தின் நிர்மாணப்பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த இரும்புக் குழாய்களை திருடிய 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களால் திருடப்பட்ட இரும்புக் குழாய்களின் பெறுமதி 1,615,000 ரூபாய் என பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நேற்று (03) பேலியகொடை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, குறித்த இரும்புக் குழாய்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
31, 35, 50 மற்றும் 66 வயதுடைய சந்தேகநபர்கள் வெலிகம, ஹிக்கடுவை, தெமடகொடை மற்றும் தெணியாய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இன்று (04) புதுக்கடை இல.05 நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ள நிலையில் பேலியகொடை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.