அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தங்கவேலாயுதபுரம் விவசாய காணி ஒன்றில் கைவிடப்பட்ட இரண்டு கைக்குண்டுகள் நேற்று (01) விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டு அவ்விடத்தில் வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய சம்பவ தினமான நேற்று (01) காலையில் குறித்த பகுதிக்கு சென்ற பொலிசார் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பை ஒன்றில் இருந்து 2 கைக்குண்டுகளை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் மீட்டனர்.
இவ்வாறு மீட்டகப்பட்ட கைகுண்டு ஒன்று இந்திய தயாரிப்பு எனவும் மற்றது இலங்கை தயாரிப்பு எனவும் தெரியவந்துள்ளது.
குறித்த கைக்குண்டுகள் நீதிமன்ற அனுமதியை பெற்று அவ்விடத்திலே வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.இந்த பகுதி விடுதலை புலிகளின் காலத்தில் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .