மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் சற்று கவனத்துடன் முடிவெடுக்க வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு விழிப்புணர்வு தேவை. தேவையற்ற விவாதங்களை தவிர்த்து கொள்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவி பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணலாம்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் மந்த நிலை மாறும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்பு சுமை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகளை எதிர் கொள்ள வாய்ப்புகள் உண்டு.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கூடுதல் பணிச்சுமை அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் மற்றவர்களுடைய விமர்சனங்களை தவிர்த்து கொள்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் ஏற்படும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். ஆரோக்கியம் கவனம் வேண்டும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். நீண்டநாள் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு ஒரு சிலருக்கு அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர இனிமையான பேச்சாற்றல் தேவை. சதா சிடுசிடுவென்று விழுந்து கொண்டிருந்தால் தேவையற்ற பிரச்சனைகள் வரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதுப்பொலிவுடன் உற்சாகம் ஏற்படும் கூடிய வகையில் அமைய இருக்கிறது. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் இனிய செய்திகளை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றம் இருக்கும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமையும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவ விட்டு கொடுத்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு புதிய புதிய வாய்ப்புகள் தேடி வர வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் மேலும் வலுவாக வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை அமைதியாக இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நிம்மதி கிடைக்கும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயலாற்ற கூடிய வகையில் அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படுவதை தவிர்ப்பது உத்தமம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் பழிகள் மறையும். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று வருத்தப்படுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சாதகப்பலன் உண்டாகும். ஆரோக்கியம் சீராகும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மற்றவர்களுடன் எளிதாக நட்புறவு கொள்ளும் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெளியிட பயணங்களின் போது கவனம் தேவை. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் அதிகரிக்கும். தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்ள முனைவார்கள். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வருவது வரட்டும் என்கிற மனப்போக்கு உடன் இருந்தால் நன்மைகள் நடக்கும். உத்தியோகத்திலிருப்பவர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். தேவையற்றவர்களின் விவகாரங்களில் தலையீடு செய்தால் வீண் பிரச்சனைகள் ஏற்பட கூடும். ஆரோக்கிய ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறும் யோகமுண்டு. நண்பர்களின் ஆதரவு தகுந்த சமயத்தில் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய தொகையை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சியுடன் அமையக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் எதிர் பாராத நபர்களின் வருகை உற்சாகத்தை ஏற்படுத்தும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சில மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். தந்தைவழி உறவினர்கள் மூலம் அற்புதமான பலன்களைக் காண இருக்கிறீர்கள். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பேச்சாற்றல் மூலம் சாதுரியமாக எல்லா தேவைகளையும் சாதித்து முடித்துக் காட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் பகைவர்களுடைய சூழ்ச்சிகளை எளிதாக முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்ற விஷயங்களை சாதகப் பலனை பெறுவீர்கள். கணவன் மனைவி பிரச்சனைகள் தீரும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வீர்கள்.