கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்திலும் இறுக்கமாக கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டிய தேவையுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. Ranjanதெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள அவர், சுகாதார அமைச்சின் வழிகாட்டல் மற்றும் கொவிட் செயலணியின் வழிகாட்டலுக்கு அமைய ஒன்று கூடல்கள், திருமண நிகழ்வுகள் மற்றும் ஏனைய நிகழ்வுகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் மிக அவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வரவேண்டும்.
அதேவேளை சுகாதார நடைமுறைகளான முக கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணல், தேவையற்ற நடமாட்டம், ஒன்றுகூடல்களை தவிர்க்க வேண்டும். எனவே இந்த நடைமுறைகளைப் பின்பற்றி எம்மையும் குடும்பத்தையும் சமூகத்தையும் பாதுகாக்க வேண்டு என அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.