கொரோனா தொற்றால் உயிரிழந்த 6 பேரின் சடலங்கள் வீடுகளிலிருந்து மீட்பு!!
கட்டான பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 25ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் வீடுகளுக்குள் மரணமடைந்த அறுவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மரணமடைந்தவர்களில் ஆண்கள் நால்வரும் பெண்கள் இருவரும் உள்ளடங்குகின்றனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்களே இவ்வாறு மரணமடைந்துள்ளனர். மரணமடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.