கொழும்பிலிருந்து நுவரெலியா பகுதிக்கு அரிசி ஏற்றிச்சென்ற லொறி ஒன்று க்குள்ளாகியுள்ளது.
குறித்த லொறி, நுவரெலியா ஹற்றன் பிரதான வீதியில், ஹற்றன் குடாகம பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு, இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும் சாரதியின் கவனயீனமே விபத்துக்குக் காரணம் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த விபத்தில் காயமடைந்த லொறியின் சாரதி, பலத்த காயங்களுடன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹற்றன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.