யாழ்.போதனா வைத்தியசாலையில் மூவர் உட்பட ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நல்லூரைச் சேர்ந்த (69 வயது) பெண் ஒருவரும் நெல்லியடியைச் சேர்ந்த (64 வயது) ஆண் ஒருவரும் சுன்னாகத்தைச் சேர்ந்த (76 வயது) ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 22 வயதுடைய இளம் பெண் ஒருவர் உட்பட இருவர், நேற்று காலை உயிரிழந்திருந்தனர்.
இதற்கமைய யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 236ஆக அதிகரித்துள்ளது.