ஹட்டன் பகுதியில் தனிமைப்படுத்துதல் ஊரடங்கு உத்தரவை மீறி கோவில் ஒன்றில் உற்சவம் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரப்பிரிவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திம்புள்ளை பொகஹவத்த கோவிலில் குறித்த உற்சவம் நேற்றைய தினம் (22) இடம்பெற்றுள்ளது.உற்சவம் ஒன்றை நடாத்தியமை தொடர்பில் குறித்த கோவிலின் நிர்வாக சபைக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றம் முன்னிலையில் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி கே.சுதர்ஷன் தெரிவித்துள்ளார்.குறித்த உற்சவத்தில் பெருந்திரளானோர் கலந்துக் கொண்டிருந்த நிலையில் அவர்கள் உரிய முறையில் முகச்கவசங்களை அணிந்திருக்கவில்லை என தெரியவந்துள்ளது