தமக்கு விருப்பமான தடுப்பூசிக்காக காத்திருக்காமல், கிடைக்கபெறும் ஏதேனும் ஒரு கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
60 வயதுக்கு மேற்பட்டோர் முடியுமானவரை விரைவாக, தமக்கு அருகிலுள்ள தடுப்பூசி செலுத்தல் நிலையத்துக்கு சென்று தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டும்.
தற்போது கொரோனா தொற்றால் மரணிப்பவர்களில் 70 முதல் 80 சதவீதமானோர் எந்தவொரு கொரோனா தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாதவர்களாவர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.