அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனக்கும் தனது மனைவி மற்றும் மகளிற்கும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து இன்று செவ்வாய்கிழமை காலை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.