மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகளை முழுமையாக அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ள நிலையில் பயணக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் அமல்படுத்தப்படும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மாகாணப் பயணக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களைக் கண்காணிக்க இன்று சனிக்கிழமை முதல் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதேவேளை சுற்றுலா, சுகாதாரம், விமான நிலையங்கள், துறைமுகங்கள், ஆடை மற்றும் விவசாயம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் மக்களை தவிர்த்து மாகாணங்களுக்கிடையேயான பொது போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
கட்டுப்பாடுகளை மீறி மாகாண எல்லைகளை கடக்க முயன்றால் பாராபட்சம் இன்றி கைது செய்யப்படுவார்கள் என்றும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், முகக்கவசம் அணிவது கண்டிப்பாக கண்காணிக்கப்படும் என்றும் மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.