வேத ஜோதிடத்தின்படி, சுக்கிரன் ஒருவரின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தற்போது சுக்கிரன் அஸ்த நட்சத்திரத்திலிருந்து விலகி சித்திரை நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார்; இந்த மாற்றம் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்குச் சிறப்பான மற்றும் மங்களகரமான பலன்களைத் தரும்.
சுக்கிரன் ஹஸ்த நட்சத்திரத்திலிருந்து விலகி, செவ்வாய் ஆளக்கூடிய சித்திரை நட்சத்திரத்தில் நுழைகிறார். இந்த நட்சத்திர பெயர்ச்சி, குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை உயர்வு, தொழில் முன்னேற்றம் மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சியை வாரி வழங்கவுள
மேஷம்
உத்தியோகம் மற்றும் தொழிலில் திறமைகளை வெளிப்படுத்த புதிய தளங்கள் அமையும். வருமானம் உயர்ந்தாலும், தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் மற்றும் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் செலுத்துவது நல்லது.
ரிஷபம்
ஐந்தாம் வீட்டில் சுக்கிரனின் சஞ்சாரம் நிகழ்வதால், படைப்பாற்றல் மற்றும் திறமைகள் மிளிரும். கலை, இசை மற்றும் எழுத்துத் துறையில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும்; சேமிப்பு கணிசமாக உயரும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர். எதிலும் அவசரப்பட்டு முடிவெடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.
துலாம்
பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகளும், புதிய தொழில் கூட்டணிகளும் கைகூடும். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் ஈட்ட முடியும்; நிதி நிலைமை சீராக இருக்கும். திருமண வாழ்க்கை மற்றும் காதல் விவகாரங்களில் இணக்கமான சூழல் நிலவும். தன்னம்பிக்கை அதிகரித்து அனைத்து சவால்களையும் எளிதாகக் கையாள்வீர்கள்.
விருச்சிகம்
பதினோராம் வீடான லாப ஸ்தானத்தில் சுக்கிரன் அமைவதால், எதிர்பாராத பண வரவு உண்டாகும். வாராக்கடன்கள் வசூலாகும்; செல்வாக்கு மிக்க நபர்களின் ஆதரவும் புதிய வருமான வழிகளும் கிடைக்கும். பணியிடத்தில் விரும்பிய இடமாற்றம் அல்லது பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. கூட்டுத் தொழில் மற்றும் இல்லற வாழ்வில் சிறு கருத்து வேறுபாடுகள் வரலாம் என்பதால், பேச்சில் நிதானம் தேவை
மகரம்
பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சுக்கிரன் பயணிப்பதால், தொட்டதெல்லாம் துலங்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் விலகி சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமும், தொழிலில் கூடுதல் லாபமும் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் புனிதப் பயணங்கள் அல்லது சுற்றுலா சென்று வர சாதகமான சூழல் அமையும்.

