ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் யாரும் தங்கியிருக்கவில்லை என்றும், அச்செய்தி முற்றிலும் தவறானது என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில் நாடு முழுவதிலும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில் 3,089 வெளிநபர்கள் தங்கியிருந்ததாகப் செய்தி வெளியானது குறித்தே ஜனாதிபதி ஊடகப் பிரிவு அந்த அறிக்கையில் விளக்கமளித்துள்ளது.
பாதுகாப்புப் படை அதிகாரிகள்
அந்த அறிக்கையில், குறித்த ஆண்டின் போது ஜனாதிபதி மாளிகைகளின் வளாகத்தில் உள்ள ஏனைய கட்டடங்களில் பாதுகாப்புப் படை அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனைய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அதிகாரபூர்வ தேவைகளுக்காக பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்கியிருந்தனர்.
ஆனால் அந்த அதிகாரிகள் யாரும் ஜனாதிபதி மாளிகைகளுக்குள் தங்கியிருக்கவில்லை“ என்றும் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

