பண்ணைப் பாலத்தினுள் தவறி வீழ்ந்து நேற்று மாலை காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தருக்கு இரு தடவைகள் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் பண்ணைப்பகுதியில் நண்பர்களுடன் சென்று செல்பி எடுக்க முற்பட்டவேளை தவறி வீழந்து காணாமல் போன குடும்பஸ்தர் இன்றையதினம் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அன்ரிஜக் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.
இதன்போது கொரோனா தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்ட நிலையில் மீண்டும் மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் மரணமான குடும்பஸ்தர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் குறித்த குடும்பஸ்தரின் சடலம் உரிய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை.