ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க இராணுவம் தெற்கு ஈரான் மீது புதிய தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.
பந்தர் அப்பாஸ், சிரிக் மற்றும் ஜஸ்க் ஆகிய துறைமுக நகரங்களிலும், கெஷ்ம் தீவிலும் வெடிப்புகள் நிகழ்ந்ததாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன .
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், ஈரான் மீது புதிய கட்டத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) அறிவித்துள்ளது.
எட்டு இடங்களில் தாக்குதல்
கிழக்கு நேரப்படி மாலை 5 மணி (ET) முதல் இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக கட்டளைப் பிரிவு ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஈரானிய படைகளை இந்த செயல்களுக்குப் பொறுப்புக்கூறச் செய்ய வேண்டும் என்ற உயர்மட்ட உத்தரவின் பேரில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தத் தாக்குதல்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கடந்த சில மணிநேரங்களில் அமெரிக்கப் படைகள் குசெஸ்தான் முழுவதும் குறைந்தது எட்டு இடங்களில் தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு பகுதியிலும் ஏற்பட்ட சேதங்களை அதிகாரிகள் இன்னும் மதிப்பீடு செய்து வருவதாகவும், அஹ்வாஸ் விமான நிலையம் தாக்கப்பட்டதை அந்த அதிகாரி மறுத்துள்ளார்

