ஹொரண, மொரகஹஹேன பகுதியில் அமைந்துள்ள கோரளயம கிராமிய வங்கியொன்றின் பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து, அங்கிருந்த தங்க நகைகளை கொள்ளையிட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இன்று (23) அதிகாலை 1.00 மணி முதல் 5.00 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை மேற்கொண்ட சந்தேக நபர்கள் மூவர் தப்பியோடியுள்ளனர். அந்த வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தரை கட்டிப்போட்டே சந்தேகநபர்கள் இந்த குற்றச்செயலை புரிந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

