நாளாந்தம் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து செல்லும் வேளை கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உச்சத்தை தொடுகின்றது.
கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் காரணமாக மருத்துவமனைகளின் பிரேத அறைகளில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும் தகனம் செய்யும் நடவடிக்கைகள் தகனசாலைகளில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் இவ்வாறு சரீரங்கள் அதிகளவில் வைத்தியசாலைகளில் தேங்கியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா மரணங்கள் தவிர்ந்த, ஏனைய காரணிகளில் மரணமானவர்களின் உடல்களும் தகனம் செய்யப்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 600 கொரோனா தொற்றாளர்கள் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில், நாளொன்றுக்கு 12 முதல் 15 மரணங்கள் வரை பதிவாவதாக குறிப்பிடப்படுகின்றது.