கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி காணாமல் போனதால், பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் புகாரளித்திருந்தனர்.
சிறுமியை தேடிய பொலிஸார், வீட்டில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள குளத்தில் சிறுமியின் உடலை சடலமாக மீட்டுள்ளனர்.
சிறுமியை அடையாளம் தெரியாத நபரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பொலிஸார் சந்தேக நபர் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்

