முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் உள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 830 லீற்றர் டீசலுடன், சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரே கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீட்டை சோதனைக்கு உட்படுத்தியபோது, 4 பீப்பாய்களில பதுக்கிவைக்கப்பட்டிருந்த 830 லீற்றர் டீசல் மற்றும் 30 லீற்றர் மண்ணெண்ணைய் என்பன மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், எதிர்வரும் 21 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டு, காவல்துறையால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.