ஆசிரியர்கள் தடுப்பூசியை பெறுவதற்கு தூர இடங்களுக்கு செல்ல தேவையில்லை என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, நாடளாவிய ரீதியில் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கோ அல்லது இன்னொரு மாகாணத்திற்கோ செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் வேறு மாவட்டத்திற்கோ அல்லது மாகாணத்துக்கோ கடமைக்காகச் செல்வோர் தற்போதுள்ள சூழ்நிலையில் கடமைக்கே செல்ல முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது.
மேலும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையினால் அவர்கள் கடமைக்குச் செல்லவேண்டிய அவசியமும் தற்போது இல்லை.
இந்நிலையிலேயே தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காக தூர இடங்களுக்குச் சென்று, தடுப்பூசி ஏற்றிய பின்னர் நெடுதூரப்பயணம் மேற்கொள்வது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.
எங்களது நியாயமான கருத்தை ஏற்றுக்கொண்ட பணிப்பாளர், தற்போது ஒதுக்கப்பட்ட ஊசிகள் முடிவடைந்துள்ளதாகவும் கிடைக்கும் வரை பொறுத்திருந்து அதனை தங்கள் பிரதேசங்களில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார்î என சரா.புவனேஸ்வரன் கூறியுள்ளார்.