க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கு 80 சதவீத பாடசாலை வருகை கட்டாயம் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு முதல் இந்த விடயம் அமுல்படுத்தப்படும் என்றும் அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை , 2022 ஆம் ஆண்டுக்காக க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கு மட்டும் இதிலிருந்து சலுகை வழங்கப்படும் என்றும் அமைச்சுகுறிப்பிட்டுள்ளது.