27.08.2020
உதவி வழங்கியவர்கள்:திரு திருமதி மார்க்கண்டு புஷ்பம் டென்மார்க் (உணாவில் சாவகச்சேரி)
முதலாவது உதவியாக உதவித் தொகை:60000,00
உதவி பெற்றவர்: செல்வி யோசனா
இடம்:புதுக்குடியிருப்பு
மாவட்டம்: முல்லைத்தீவு
உதவியின் நோக்கம்:கல்விக்கான ஊக்கிவிப்பு (கணனி கொள்வனவு செய்வதற்கு)
27.08.2021 இன்று 71வது பிறந்த நாளை கொண்டாடும் திருமதி புஷ்பம் அம்மா இறைவன் அருளால் நீடூழி காலம் இன்பமாக வாழ வாழ்த்துகின்றோம். இந்த நாளில் உயர் கல்வி கற்கும் மாணவிக்கு மடிக்கணனி வாங்குவதற்கு முதலாவது கொடுப்பனவாக 60,000ஆயிரும் ரூபா வழங்கியிருந்தனர் இந்த மாணவிக்கு கடந்தகாலத்தில் மாதம் 5000 ரூபா வீதம் வழங்கி வந்தனர் தற்சமயம் வீட்டில் இருந்து கல்விகற்கவேண்டிய தேவை கருதி மாதாந்த நிதியினை நிறுத்தி மடிக்கணனி ஒன்று பெற்றுத்தருமாறு குறிப்பிட்ட மாணவி கேட்டதற்கிணங்க திரு மார்க்கண்டு ஐயாவின் நிதியில் இருந்து வழங்கப்பட்டது அத்துடன் இந்த உதவியினை வழங்கிய திரு மார்க்கண்டு ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அவர்கள் பல பிள்ளைகளை ஈழத்தில் படிப்பித்து வருகின்றார்கள். அத்துடன் எமது லண்டன் மகளிர் அணியின் செயலாளராகவும் புஷ்பம் அம்மாவின் மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
புஷ்பம் அம்மாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.