கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டில் 7 சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை முன்னதாக, சந்தேகநபர்களை இன்று நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
எனினும் சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால் அவர்களை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.