அநுராதபுரம் சதொச நிறுவனத்தில் சுமார் ஆறு கோடியே தொண்ணூற்று ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான நாடு மற்றும் சம்பா அரிசியை மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கு தொடர்பில் சதொச களஞ்சிய முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் சதொச களஞ்சிய முகாமையாளர்
நீண்ட விசாரணையின் பின்னர் சந்தேகத்தின் பேரில் இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அநுராதபுரம் சதொச களஞ்சிய முகாமையாளர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைதான சந்தேக நபரை ஜனவரி மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, களஞ்சியசாலை, அநுராதபுரம் பிரதான நீதிவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி நாலக ஜயசூரியவே உத்தரவிட்டார்.
அதோடு சந்தேக நபர் வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் கட்டுநாயக்க மற்றும் மத்தல சர்வதேச விமான நிலையங்களின்குடிவரவு குடியகல்வு அதிகாரிகளுக்கும் நீதவான் இது தொடர்பில் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.