கொவிட்-19 பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 615 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இன்று முற்பகல் 8.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 13 விமான சேவைகளில் அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 135 இலங்கையர்களும், கட்டாரில் இருந்து வந்த 173 இலங்கையர்களும் அவர்களில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் 9 விமான சேவைகளில் 431 இலங்கையர்கள் தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக விமான நிலையத்திலுள்ள எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.