கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2009 முதற்பகுதியில் மீன் வியாபாரியாக இருந்த ஒருவர், கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவரிடமிருந்து 60 லட்ச ரூபாய் கைமாற்றாக வாங்கி சுவிட்சர்லாந்து சென்றதாக கூறப்படுகின்றது.
அதன் பின்னர் சுவிஸ் சென்ற குறித்த நபர், அவருடைய மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளையும் அங்கு எடுத்து விட்டபோதும் , தன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் எஸ். ஜீவராஜ் என்பவர் தனது முகநூலில் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
அதேசமயம் கடந்த 4 ஆம் திகதி குறித்த பதிவை அவர் இட்டிருந்த நிலையில் தற்போது அந்த பதிவை நீக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.