பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள பட்டதாரிகள் தமக்கு வழங்கப்படும் 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவில் ஏதேனும் பிரச்சினை இருக்குமாயின் அதனை உரிய பகுதியினரின் கவனத்திற்கு கொண்டுவருமாறு அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள 53,000 பட்டதாரிகள் எதிர்வரும் மூன்று மாதங்களில் அரச நிறுவனங்களுக்கு இணைக்கப்பட உள்ளார்கள்.
இந்தப் பட்டதாரிகளுக்கு விரைவில் தொழில் வழங்குவதற்கான பொறுப்பை ஜனாதிபதி ராஜபக்ச சில அமைச்சர்களுக்கு வழங்கியுள்ளார்.
இவர்களுக்கு தற்சமயம் வழங்கப்படும் 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் அதுபற்றி கண்டறிந்து உரியவர்களுக்கு நிலுவை தொகையும் வழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
நேற்று (14) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இது பற்றி கருத்து வெளியிட்டார். அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்கள் உயர்ந்த பட்ச அளவில் குறைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பது மிக முக்கியமானதாகும் என்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.