கடந்த சில நாட்களில், இலங்கை மத்திய வங்கி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நாணய மாற்று சந்தைகளில் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலரை கொள்வனவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி பி.கே.ஜி.ஹரிச்சந்திர இதனை தெரிவித்தார்.
அத்துடன் இலங்கை ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பாரிய வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தவே டொலரைக் கொள்வனவு செய்ததாகவும் அவர் கூறினார்.
தனியார் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோதே அவர் இந்த தகவல்களை கூறியுள்ளார்.

