மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குற்றக் குழுவைச் சேர்ந்த நபர்களுக்கு ஆதரவாக செயற்பட்ட 5 அதிகாரிகள் உடனடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கண்டறியப்பட்ட சிறைச்சாலையின் சிறைக்காவலர் உட்பட 5 அதிகாரிகள் உடனடியாக அமுலுக்குவரும் வகையில் திருகோணமலை உள்ளிட்ட சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மாத்தறை சிறைச்சாலையின் சிறைக்காவலர் மீது திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த பத்து பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்ட து.
அதன் பின்னரே இந்த ஐந்து அதிகாரிகளும் மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள நபர்களுக்கு ஆதரவாக செயற்பட்டமை தெரியவருகிறது.
அண்மையில் வெலிகமவில் பஸ் ஒன்றில் காலி சிறைச்சாலை காவலர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.