கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று காணாமல் போன ஐந்தாவது நபரின் சடலம் இன்று (30) பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பல மணி நேரமாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
22 வயதுடைய யுவதியின் சடலம் ஒன்றே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
எடம்பிட்டிய – நாவல வீதியில் வசிக்கும் 11 பேர் கொண்ட குழுவினர் நேற்று (29) பிற்பகல் கெரண்டி நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு சென்றுள்ளனர்.
அவர்கள் நீராடிக்கொண்டிருந்த போது, நான்கு யுவதிகள் மற்றும் ஒரு இளைஞன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
அவர்களில் 19 முதல் 23 வயதுடைய நான்கு யுவதிகளும் 23 வயதுடைய ஆணும் அடங்குவர்.
பின்னர் பிரதேசவாசிகளின் உதவியுடன் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது அவர்களில் நால்வரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.