07.10.2021
உதவி வழங்கியவர்கள்: திரு திருமதி சோபியா லண்டன்( எமது மகளிர் அணி உறுப்பினர்.
முல்லைத்தீவு – ஒட்டிசுட்டான் பிரதேசசெயலர் பிரிவில் மணவாளன்பட்டமுறிப்பு கிராமசேவகர்பிரிவில் பாதிக்கப்பட்ட 30குடும்பங்களுக்கு உலருணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
வன்னித்தமிழ் ஊடகவியலாளர்களின் வேண்டுகோளிற்கு இணங்க உதவும் இதயங்கள் லண்டன் கிளையின் மகளிர் அணி உறுப்பினர் திருமதி.சோபியா அவர்களின் நிதிப் பங்களிப்பில் 42000ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
குறிப்பாக ஒரு குடும்பத்திற்கு தலா 1350ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை ஒட்டிசுட்டான் பிரதேசசெயலாளர் இ.அகிலன் அவர்களினால் பயனாளிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மணவாளன்பட்டமுறிப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், ஊடகவியலாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்த ஏற்ட்டிபாட்டினை செய்து தந்த ந.கலைச்செல்வன் அவர்களுக்கு நன்றி கூறுவதுடன் திரு திருமதி சோபியா அவர்களுக்கும் அவர்கள் குடும்பமும் நலமுடன் வாழ வாழ்த்துகின்றோம்.