இலங்கையில் இன்றைய தினம் (03-01-2023) முதல் எதிர்வரும் 6ஆம் திகதி வரை மின்வெட்டை அமுல்படுத்துவது தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.
இதனடிப்படையில் குறித்த 4 நாட்களிலும் 2 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த மாதம் 28 திகதி க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக பெப்ரவரி 16 ஆம் திகதி வரை எந்த மின்வெட்டையும் அமுல்படுத்தப்பட வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு எழுத்துப்பூர்வமாக இலங்கை பொதுபயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்திருந்தது.
க. பொ. த உயர்தரப் பரீட்சையின் போது இலங்கை மின்சார சபை எவ்வித மின்வெட்டையும் விதிப்பதைத் தடுக்கும் வகையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இடைக்கால உத்தரவுக்கான கோரிக்கையை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
மனித உரிமைகள் ஆணையத்தின் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு முடிவடையும் வரை மின்வெட்டுகளை அமுல்படுத்துவதை இடைநிறுத்துவதாக வழங்கிய உறுதிமொழியை மீளப்பெறுவதாகவும் இலங்கை மின்சார சபை நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.