இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்காக கொள்கலன்களை வழங்கும் நடவடிக்கையினை லங்கா IOC நிறுவனம் முன்னெடுத்துள்ளது.
இந்நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டோக்கன் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.
டோக்கன் வழங்கப்படுவதன் காரணமாக ஏற்படும் பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தற்போதைய தேவைக்கேற்ப எரிபொருளை விநியோகிக்க முடியாத போதும், அதனை வழங்குவதற்கு சிறந்த முறையில் செயற்பட்டு வருவதாக ஐஓசி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.
அதேவேளை திருகோணமலையில் இருந்து நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.