இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட உணவகத்தில் இந்திய மதிப்பில் 34 ஆயிரம் ரூபாய்க்கு சாப்பிட்ட 8 பேர் கொண்ட குடும்பம், காசு கொடுக்காமல் தப்பிச் சென்ற சம்பவம் ஒன்றுஇ பதிவாகியுள்ளதுது.
பணம் செலுத்துவதுபோல கார்டை இரண்டு முறை தேய்த்தும் பரிவர்த்தனை மறுக்கப்பட்ட நிலையில், தனது மகனை விட்டுச் சென்று வேறு கார்டு எடுத்து வருவதாக 7 பேர் வெளியேறினர்.
பின்னர், மகனும் ஃபோன் பேசியபடி நழுவிய நிலையில், அந்த குடும்பம் முன்பதிவு செய்ய அளித்திருந்த ஃபோன் நம்பர் போலி என தெரிய வந்ததாக உணவக நிர்வாகம் கூறியுள்ளது.
இதனையடுத்து பண்ம் செலுத்தாமல் சென்றவர்களின் புகைப்படத்தை குறித்த உணவக நிர்வாகத்தின் சமூக வலைப்பதிவின் மீது வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.