காலி – ருக்கத்தன பகுதியில் 33 வயதான மகளை தந்தை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை மதுபோதையில் இருந்தபோது, இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சந்தேக நபரை காவல்துறையினர் இன்று பத்தேகம நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.