பெல்மதுல்லை பகுதியில் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் திகதி தனியார் பேருந்து ஒன்றிலிருந்து தவறி வீழ்ந்த 32 வயதுடைய பெண் வைத்தியர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் 14 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் உயிரிழந்தார்.
இறந்தவர் இரத்தினபுரியைச் சேர்ந்த வைத்தியர் பி. மதரா மதுஷானி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு-கொழும்பு பிரதான சாலையில் தனியார் பேருந்தில் அவர் பயணம் செய்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.
பெல்மதுல்லை பொலிஸ் நிலையத்திற்கு அருகில், குறித்த பேருந்தின் சாரதி எதிர்பாராத விதமாக திடீரென பிரேக் பிடித்ததால் அவர் பேருந்தில் இருந்து கீழே வீழ்ந்ததாக கூறப்படுகிறது.
இதனால், அவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

