ரஷ்யாவில் செப்டம்பர் நடுப்பகுதியில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, போருக்காக மேலும் 3,00,000 வீரர்களைத் திரட்ட மொஸ்கோ திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கிழக்கு உக்ரைனின் தொழில்மயமான டொன்பாஸ் பிராந்தியத்தின் எஞ்சிய பகுதிகளைக் கைப்பற்றும் நோக்கில் ரஷ்யப் படைகள் தீவிரமாக முன்னேறி வருகின்றன.
மொத்தம் 5,00,000 துருப்புக்களைத் திரட்டும் இலக்கை எட்டுவதற்காக, 2027 ஆம் ஆண்டிலும் ரஷ்யா மேலும் பலரை ராணுவத்தில் சேர்க்கக்கூடும் என்றும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
ரஷ்யாவின் திட்டம்
தலைநகர் அல்லது முக்கிய நகரங்களைத் தவிர்த்து, ரஷ்யாவின் தூரத்திலுள்ள தொலைதூரப் பகுதிகளை இலக்கு வைத்து இந்த ஆட்சேர்ப்பு நடைபெறும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், கொஸ்டியான்டினிவ்கா போன்ற மூலோபாய நகரத்தைச் சுற்றி கடுமையான சண்டை நடந்து வரும் நிலையில், உக்ரைனின் கோட்டை நகரங்களுக்குள் நுழைய முயன்று ரஷ்யா பெரும் எண்ணிக்கையிலான வீரர்களை இழந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

