துருக்கி இலங்கையிடம் கோரிக்கை விடுக்கும்பட்சத்தில் எந்த சந்தர்ப்பத்திலும் இராணுவ குழுவொன்றை அனுப்புவதற்கு தயார் என வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சடத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அதற்காக பொறியியலாளர்கள் மற்றும் வைத்தியத்துறை உறுப்பினர்கள் அடங்கிய சுமார் 300 இராணுவ வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம்
நேற்றும் இன்றும் இடம்பெற்ற நிலநடுக்கங்கங்களால் துருக்கி மற்றும் சிரியாவில் 5000 இற்கு அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
இந்நிலையில் பெரும் அழிவுகளை சந்தித்த துருக்கியின் மீட்பு பணிக்காய் பல நாடுகளும் உதவிக்கரம் நீட்டியுள்ள நிலையில் வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி அந்நாட்டுக்கு உதவ தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.