சனி பகவான் ஏப்ரல் 29ஆம் தேதி 2022-ல் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குள் நுழைகிறார். இது அவரது சொந்த ராசியாகும். இந்நிலையில் சனி பகவான் 30 வருடங்களுக்குப் பிறகு கும்ப ராசிக்குள் பிரவேசிக்கப் போகிறார் என ஜோதிடர்கள் கூறுகின்றன.
கிரகங்களில் சனி பகவான் பிரதான கடவுளாக கருதப்படுகிறார். 2022-ஆம் ஆண்டு சனி பகவான் இரண்டு முறை தன் நிலையில் இருந்து மாறுவார் என கணிக்கப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அவர் ராசியையும் மாற்றுவார்.
இந்த மாற்றம் அனைத்து ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் இந்த 8 ராசிகள் மீது மட்டும் இந்த வருடம் முழுவதும் சனியின் கண் பார்வை இருக்கும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
சனி பகவான் ஏப்ரல் 29ஆம் தேதி 2022-ல் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குள் நுழைகிறார். இது அவரது சொந்த ராசியாகும்.
சனி பகவான் இந்த ராசிக்குள் 30 வருடங்களுக்குப் பிறகு பிரவேசிக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சனியின் தாக்கம் ஆரம்பமாகும் ராசிகள்;
சனி பகவான் கும்ப ராசியில் நுழைந்தவுடன் கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனியின் தாக்கம் ஆரம்பமாகும்.
இதனுடன் மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியும் தொடங்கும். ஏழரை நாட்டு சனி இந்த ராசிக்காரர்களை பல வழிகளில் தொந்தரவு செய்யும் ஆனால் கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் நன்றாக இருக்கும் என சொல்லப்படுகின்றது.
சனிபகவான் தனது ராசியான கும்ப ராசிக்காரர்களிடம் கருணை காட்டுவார். அவர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசிக்கச் செய்வார்.
இது தவிர, மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கும் சனிபகவானின் ஏழரை நாட்டு சனி நிறைவடையும். இது அவர்களுக்குப் பல நன்மைகளைத் தரும் எனறு ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
2022 ஆம் ஆண்டில் சனி பகவானின் அடுத்த பெயர்ச்சி
2022 ஆம் ஆண்டில், சனி பகவானின் நிலையில் இரண்டாவது மாற்றம் ஏற்படும். அது ஜூலை 12ஆம் தேதி 2022 அன்று நிகழும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் சனி பகவான் பின் நோக்கி நகர்ந்து முந்தைய ராசியான மகர ராசிக்குள் நுழைவார்.
இந்த பெயர்ச்சியால், தனுசு, மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு மீண்டும் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. ஜனவரி 17ஆம் திகதி, 2023 வரை சனி பகவான் இந்த ஸ்தானத்தில் இருப்பார்.
எனினும் இக்காலத்தில் மீனம், கடகம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனியின் தோஷம் நீங்கி நல்ல பலன்கள் கிடைக்கும் என்றும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்