கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை 1.44 மணியளவில் 30 நிமிடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
இன்று திங்கட்கிழமை பிற்பகல் (21-02-2022) நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முந்தைய வர்த்தக நாளை விட S&P SL20 சுட்டெண் 5%க்கு மேல் சரிந்ததே இதற்குக் காரணமாகும்.
இதன்படி, அனைத்துப் பங்கு விலைக் சுட்டெண் 540.43 புள்ளிகளும், S&P SL20 சுட்டெண் 207.60 புள்ளிகளும் சரிந்தன. பிற்பகல் 2.14 மணிக்கு வர்த்தகம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.