3 வயதுடைய சிறுமியை கொடூரமாக தாக்கிய பெற்றோர் இன்று (1) கைது செய்யப்பட்டதாக ரிதிமாலியத்த பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் ரிதிமாலியத்த ஊரணிய கஹட்டவாடிய 13, மைல்கல் பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய தாய் மற்றும் 27 வயதுடைய தந்தை ஆகியோரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெற்றோரின் தாக்குதலில் படுகாயமடைந்த 3 வயது சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரிதிமாலியெத்த காவற்துறை அதிகாரிகள் குழுவொன்று குறித்த வீட்டை சுற்றிவளைத்து சந்தேகத்தின் பேரில் தம்பதிகளை கைது செய்துள்ளனர்.