தாயகத்தில் அடுத்தவேளை உணவு கிடைக்காது அடுத்தவரின் உதவையை எதிர்பார்த்து நிற்கும் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் நிலை கண்ணீரை வரவழைப்பதாக அமைந்துள்ளது.
முறிகண்டி பகுதியில் உள்ள வசந்த புரத்தில் கணவனை இழந்த நிலையில் இரு பிள்ளைகளுடன் இளம் விதவை தாயொவர் அல்ல நிலை பெரும் வேதனைய ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு போரின் பாதிப்பு ஒரு பக்கமும் , நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் வறுமைகோட்டில் வாழும் மக்கள் பெரும் கஸ்ரத்தை எதிர்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் படும் கஸ்ரம் கண்களில் கண்ணீரை வரவைக்கின்றது. இந்நிலையில் தந்தையை இழந்து தவிக்கும் அந்த குழந்தைகளின் வாழ்வில் சற்று ஒளியேற்ற முற்படுகின்றது நம் உறவுப்பாலம் நிகழ்ச்சி.