தொடம்கஸ்லந்த, தெலம்புகல்ல பிரதேசத்தில் வீட்டின் கேட் விழுந்ததில் 3 வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் மொஹமட் இர்ஷாத் மரியம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சிறுமியும் அவரது உறவினரான நான்கு வயது குழந்தை ஒன்றும் நேற்று மதியம் கேட் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது சிறுவர்கள் கேட்டில் தொங்கி விளையாடுகையில் இந்த அனர்த்தம் நேர்ந்ததக உயிரிழந்த சிறுமியின் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமி வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதுடன் மற்றைய பிள்ளை பலத்த காயங்களுடன் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது